சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தாஜ்மஹாலில் நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது.

Don Movie Shooting in Tajmahal : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தினை தொடர்ந்து தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் டான் என்ற படத்தில் நடிக்கிறார்.

வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி : இன்று, அன்னை பிறந்த நாள் விழா

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் சிவாங்கி விஜய் டிவி புகழ் என பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

அவரோட பாட்டுக்குலாம் நான் Tik Tok பண்ணுவேன்! – Actress Mirnalini Ravi Cute Speech | JangoAudioLaunch

படத்தின் படப்பிடிப்புகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக டெல்லியில் தாஜ் மகாலில் நடைபெறுகிறது. சிவகார்த்திகேயன் தாஜ்மஹால் அருகே நின்று கொண்டிருக்கும் புகைப்படம் மற்றும் படத்தின் சூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகின்றன.