சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Don Movie Review : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அட்லீயின் உதவி இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் டான். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, சமுத்திரகனி, பாலசரவணன் விஜய் என பலர் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

டாப்பு டக்கரா? சுமாரா? - டான் படத்தின் முழு விமர்சனம்.!!

படத்தின் கதைக்களம் : கட்டுக்கடங்காத கோபத்தை கொண்டவரின் மகனாக வளர்கிறார் சிவகார்த்திகேயன். இவர் செல்லும் இடமெல்லாம் ஒரே அராஜகம் தான். அப்படியான நிலையில் டிசிபிளின் கமிட்டியின் தலைவராக இருக்கும் பூமிநாதனை ( எஸ் ஜே சூர்யா ) சந்திக்கிறார். அதன் பின்னர் இவர்களுக்கு இடையே என்னவெல்லாம் நடந்தது என்பதுதான் இந்த படத்தின் காமெடியான கதை களம்.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

சிவகார்த்திகேயன் நடிப்பில் வழக்கம் போல் தூள் கிளப்புகிறது‌. கல்லூரி மாணவனாக அவனது காமெடி காட்சிகள் சிரிப்பலையை உருவாக்குகின்றன.

பிரியங்கா மோகன் அழகான நடிப்பை கொடுத்துள்ளார். அவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சிவாங்கி, பால சரவணன், உள்ளிட்டோர் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். எஸ் ஜே சூர்யா வழக்கம்போல் அவரது நடிப்பில் மிரட்டியுள்ளார். சமுத்திரகனி அவரது கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து கொடுத்துள்ளார்.

டாப்பு டக்கரா? சுமாரா? - டான் படத்தின் முழு விமர்சனம்.!!

தொழில்நுட்பம் :

அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். பாடல்கள் அனைத்தும் கொண்டாட வைக்கிறது.

ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. எடிட்டிங் கனகச்சிதம்.

இயக்கம் : சிபி சக்ரவர்த்தி காமெடியான கதை களத்தை கையில் எடுத்து அதில் எமோஷன் லவ் என அனைத்தையும் கலந்து சிறப்பான படமாக டான் படத்தை கொடுத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிப்பு.

2. காமெடி

3. இசை

டாப்பு டக்கரா? சுமாரா? - டான் படத்தின் முழு விமர்சனம்.!!

தம்ப்ஸ் டவுன் :

1. சில காட்சிகளில் நண்பன் படம் நினைவுக்கு வருகிறது.