திரையரங்குகளில் வெற்றிநடை போடும் டான் திரைப்படம் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Don Movie OTT Release Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் டான். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்க அனிருத் இசை அமைத்துள்ளார்.

திரையரங்குகளில் வெற்றிநடை போடும் டான் OTTயில் எப்போது ரிலீஸ் தெரியுமா? - இதோ அதிரடி அப்டேட்

படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி, சிவாங்கி, பாலசரவணன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெற்றிநடை போடும் டான் OTTயில் எப்போது ரிலீஸ் தெரியுமா? - இதோ அதிரடி அப்டேட்

பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை ஆடி வரும் நிலையில் இந்த படம் ஜூன் 10ஆம் தேதி இணையதளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.