Does your hair look red?
Does your hair look red?

1) முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் தலைமுடியை அலச வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை முடியானது விரைவில் மறைந்து கருமை நிறத்திற்கு மாறும்.

2) செம்பருத்தி இலையையும் மரிக்கொழுந்து இலையையும் சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர செம்பட்டை கருப்பாக மாறும்.

3) ஆமணக்கு எண்ணெயினை தலையில் தடவி மசாஜ் செய்து பின்பு குளிக்க செம்பட்டை நிறம் கருமையாக மாறும்.

4) தினமும் தலைமுடி வறண்டுபோகாமல் தேங்காய் எண்ணெய் கொண்டு தலையினை மசாஜ் செய்து வர செம்பட்டை முடி வராது.

5) தினமும் தலைக்கு குளிக்கும் முன்பு நல்ல தேங்காய்ப் பால் தேய்த்து பின்பு குளிக்கவும்.

6) ஆலீவ் ஆயிலை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து வர செம்பட்டை முடி கருமையாக மாறும்.

7) கேரட்டை நன்கு அரைத்து எலுமிச்சை சாறு கலந்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து வதக்கி அந்த எண்ணெயை தலையில் தேய்த்துவர செம்பட்டை முடி கருமையாக மாறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here