Doctor Sethuraman Selfie With Lokesh Kanagaraj
Doctor Sethuraman Selfie With Lokesh Kanagaraj

டாக்டர் சேதுராமன் இறுதியாக மாஸ்டர் பட இயக்குனருடன் எடுத்துக்கொண்ட செல்பி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Doctor Sethuraman Selfie With Lokesh Kanagaraj : தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சேதுராமன்.

டாக்டராக பணியாற்றி வரும் இவர் நேற்று இரவு மாரடைப்பால் மரணமடைந்தார். சேதுராமனுக்கு தற்போது வெறும் 36 வயது தான் ஆகிறது என்பதால் இவருடைய மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறுதியாக இவர் கரோனா விழிப்புணர்வு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை தொடர்ந்து இவர் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் யுடன் இறுதியாக எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் மற்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் சேதுராமனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.