Doctor Request to Vijay and Simbu

திரையரங்குகளில் 100 சதவீத அனுமதி அளித்ததையடுத்து விஜய் மற்றும் சிம்புக்கு மருத்துவர் ஒருவர் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.

Doctor Request to Vijay and Simbu : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது.

தமிழகத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கொரானா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் 100 சதவீத அனுமதி.. விஜய் மற்றும் சிம்புக்கு மருத்துவரின் உருக்கமான கோரிக்கை.!!

இந்த நிலையில் பொங்கலுக்கு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் என இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி அளித்திருந்த தமிழக அரசு தற்போது 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

இதனால் கொரோனா வைரஸ் பற்றி மீண்டும் தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவர் ஒருவர் முகநூல் பக்கத்தில் உருக்கமாக பதிவு ஒன்றை தெரவித்துள்ளார்.

இந்த பதிவை தளபதி விஜய் மற்றும் சிம்புவிற்கு கோரிக்கை வைத்துள்ளார். அதில் நான் சோர்வாக உள்ளேன். நாங்கள் சோர்வாக உள்ளோம். மருத்துவர்கள் அனைவரும் சோர்வாக உள்ளார்கள்.

தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் அனைவரும் சோர்வாக உள்ளார்கள். தற்போது விட வைரஸ் தொற்றால் தினந்தினம் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். இந்த தொற்று நோயிலிருந்து இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை.

இது 100 சதவீத இருக்கைக்கு அனுமதி என்பது பண்டமாற்று முறை போல் பணத்தை கொடுத்து நோயை வாங்குவது போல தெரிகிறது. பணத்திற்காக உயிரை பணயம் வைக்கும் வியாபாரம் போலத்தான் தெரிகிறது என கூறியுள்ளார்.

மூடப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?? என்பதைக் குறித்து சில கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.