சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் எப்போது? – வெளியான லேட்டஸ்ட் தகவல்

Doctor Release Update : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹீரோ திரைப்படம் ஓவர் பில்டப்பால் சரியாக ஓடாமல் சறுக்கத்தை ஏற்படுத்தியது, மிஸ்டர் லோக்கல் திரைப்படம் காமெடி படம் என்ற பெயரில் காமெடியே இல்லாமல் வெளியானதால் தோல்வியைத் தழுவியது.

இதனால் சிவகார்த்திகேயனின் கரியர் அவ்வளவு தான் என பேசாத ஆட்களே இல்லை. அதன் பின்னர் நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் பழைய இடத்தை பிடித்து தன்னை பற்றி பேசியவர்களை எல்லாம் வாயடைக்க வைத்தார்.

கல்யாணத்தைப் பற்றி தளபதி விஜய் சொன்ன வார்த்தை, சிவகார்த்திகேயன் கொடுத்த கிப்ட் – திருமண கலாட்டாக்கள் குறித்து பேசிய யோகி பாபு.!

மேலும் சிவகார்த்திகேயன் தற்போது கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்டர் என்ற படத்தில் நடித்து வந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது.

இந்த நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு நிறைவுக்கு வந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்புகளை கோவாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

LOCK DOWN 4.0 : 20 லட்சம் கோடியில் தமிழ்நாட்டுக்கு எத்தனை கோடி கமல்ஹாசன் கேள்வி..!

திட்டமிட்டபடி விரைவில் படப்பிடிப்புகள் தொடங்கினால் இந்த படத்தை டிசம்பரில் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.