டாக்டர் படத்தை நேரடியாக OTT-யில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Doctor Release in OTT : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தொகுப்பாளராக மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக பயணத்தை தொடங்கிய இவர் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரம்ஜான் விருந்தாக மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுகளிலும் முழு ஊரடங்கு, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

OTT-யில் டாக்டர் திரைப்படம் ரிலீஸ்?? விறுவிறுப்பாக நடக்கும் பேச்சுவார்த்தை

இதனால் டாக்டர் திரைப்படத்தை நேரடியாக OTT தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.