Doctor Release Announcement

டாக்டரின் ரிலீஸ் விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனம் எடுத்த முடிவு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Doctor Release Announcement : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பெற்றிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர், அயலான் என இரண்டு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமல்லாமல் டான் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

நார்வே தூதரகத்தை கைப்பற்றி, தலிபான்கள் தொடர் அட்டூழியம்..

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் நேரடியாக OTT-யில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் இதற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

Big Breaking : சாலை விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் – காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

மேலும் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 சதவீத பார்வையாளர்களுடன் திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தயாரிப்பு நிறுவனம் நேரடி OTT ரிலீஸ் முடிவில் இருந்து பின்வாங்கியது. வரும் அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் டாக்டர் திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.