Doctor Premiere Telecast in Sun Tv

திரையரங்குகளில் வெளியான வேகத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது டாக்டர் திரைப்படம்.

Doctor Premiere Telecast in Sun Tv : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் டாக்டர். சிவகார்த்திகேயன் மற்றும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கினார்.

ஆற்றல் தரும் ஐந்து சிவ மந்திரங்கள்.!

படத்தில் யோகிபாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வினய் வில்லனாக நடிக்க பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படம் வெகுவிரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Superstar Rajinikanth-ன் உண்மையை உடைத்த Soundarya Rajinikanth.! | Hoote App Launch | Latest Video HD

அதாவது தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் 4ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணிக்கு சன் டிவியில் டாக்டர் திரைப்படம் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.