Doctor Surprise
டாக்டர் பர்ஸ்ட் லுக் மட்டுமில்லாமல் இன்னொரு சர்ப்ரைஸ் ஒன்றும் காத்துக் கொண்டிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Doctor Movie Surprise : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் சிவா பிறந்த நாள் ட்ரீட்டாக வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

அதில் டாக்டர் பர்ஸ்ட் லுக் எப்படி இருக்கு? இன்னொரு சர்ப்ரைஸ் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கு என கூறி ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளனர்.

இதனால் இன்று மாலை இன்னொரு லுக்கோ அல்லது மோஷன் போஸ்டரோ வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.