தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக சன் டிவியில் முன்னணி நடிகரின் திரைப்படம் ஒன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Doctor Movie Direct Release in Sun TV : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. தற்போது பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன் திலிப் குமார் இந்த படத்தை இயக்கி உள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக சன் டிவியில் வெளியாகப்போகும் முன்னணி நடிகரின் திரைப்படம் - வெளியான ஷாக்கிங் தகவல்

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாததால் படம் வெளியாகாமல் உள்ளது. அதேசமயம் இந்த திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

கட்டுப்பாடு பகுதிகள், 5 மாவட்டத்தில் இல்லை : தமிழக அரசு அறிவிப்பு

இந்த நிலையில் தற்போது டாக்டர் ரிலீஸ் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் வரும் தீபாவளி அன்று நேரடியாக சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. இது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vijay-யுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி – Beast Update சொன்ன Pooja Hegde! | Nelson Dilipkumar

இந்தப் படம் நேரடியாக OTT-யில் வெளியாவதாக வெளியான தகவலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆக உள்ளதாக வெளியான தகவல் அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதே தீபாவளித் திருநாளில் தான் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.