சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் சென்சார் சான்றிதழில் நீங்கள் கவனித்திருக்கீங்களா??

Doctor Movie Censor Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் டாக்டர். கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார்.

இந்தத் திரைப்படம் ரம்ஜான் விருந்தாக இன்று வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு அதன் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது தான் முதல் முறை.. டாக்டர் படத்தில் இதை கவனித்தீர்களா??

இந்த நிலையில் நேற்று டாக்டர் திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் இணையத்தில் வெளியாகி இருந்தது. படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்திருப்பது உறுதியானது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த அனைத்து படங்களுக்கும் சென்சாரில் யு சான்றிதழ் மட்டுமே கிடைத்து வந்த நிலையில் தற்போது முதன்முறையாக அதனை தவறவிட்டு உள்ளார்.

அதாவது சிவகார்த்திகேயன் படத்திற்கு சென்சாரில் யு ஏ சான்றிதழ் அளித்து இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.