டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக டாக்டர் திரைப்படம் OTT-யில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Doctor Movie Business Details : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் ரம்ஜான் விருந்தாக மே 14-ம் தேதி வெளியாக இருந்தது.

ஆனால் தற்போது திரையரங்குகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் படம் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் படத்தினை OTT-ல் வெளியிட படக்குழு முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக விலைபோன டாக்டர் திரைப்படம்.. OTT-யில் மிகப் பெரிய தொகைக்கு விற்பனை.!!

இப்படியான நிலையில் தற்போது இந்த படத்தினை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் ரூபாய் 42 கோடிக்கு இந்த படத்தினை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக டாக்டர் படம் விற்பனையாகி இருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

‌‌