நெட் பிளிக்ஸ் டாப் 10 லிஸ்ட்டில் 2 இடங்களை பிடித்துள்ளது டாக்டர் திரைப்படம்.

Doctor in Top10 List of Netflix : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக பயணத்தை தொடங்கிய இவர் தற்போது பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் டாக்டர்.

உலகில் விண்வெளியில் வாக்கிங் சென்ற, முதல் வீராங்கனை..

சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி 25 நாட்களில் 100 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது. சிவகார்த்திகேயனின் திரை பயண வரலாற்றில் ரூபாய் 100 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் டாக்டர் தான்.

ரெண்டு பேரோட Combo செம – Enemy Day 4 Common Audience Review | Vishal, Arya, Mirnalini Ravi | HD

திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து இந்த திரைப்படம் தீபாவளி விருந்தாக சன் டிவியில் ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் இந்த படம் வெளியான நிலையில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி வெர்ஷனும் டாப் 10 லிஸ்டில் இடம் பிடித்துள்ளன. இதனை படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.