Doctor
டாக்டர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Doctor First Look : தமிழ் சின்னத்திரையில் இருந்து தன்னுடைய கடுமையான உழைப்பால் படிப்படியாக உயர்ந்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இடம் பிடித்துள்ளார் சிவகார்திகேயன்.

இவரது நடிப்பில் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் என்ற திரைப்படம் உருவாக உள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சிவாவின் பிறந்த நாள் ட்ரீட்டாக இணையத்தில் வெளியாகியுள்ளது. போஸ்டரில் சிவகார்த்திகேயன் கையில் ரத்தக்கறையுடனுடன் காலுக்கடியில் ரத்த வெள்ளத்துடன் அமர்ந்திருக்கிறார்.

அவரை சுற்றி ஒரே கத்தி மயமாகவே உள்ளது. இதனால் இப்படம் நிச்சயம் வித்தியாசமான கதைக்களத்துடன் சமூகத்தில் நடக்கும் ஒரு பிரச்னையை பேசும் என எதிர்பார்க்கலாம்.