Doctor First Look
சிவகார்த்திகேயனின் டாக்டர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Doctor First Look Poster : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், பல தடைகளை தாண்டி முன்னேறியுள்ளவர். இவருக்கு இன்று பிறந்த நாள் என்பதால் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மேலும் சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் ட்ரீட்டாக அவர் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவித்திருந்தனர்.

அதன்படி தற்போது டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது, இதோ அந்த அதிகாரபூர்வ போஸ்டர்