Doctor Censored With UA

டாக்டர் படத்திற்கு யு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் ரன்னிங் டைம் குறித்த சான்றிதழ் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Doctor Censored With UA : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராக உள்ளது திரைப்படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் ரம்ஜான் விருந்தாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தற்போதைக்கு இல்லை என படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. மேலும் அந்த அறிக்கையில் படம் எப்போது ரிலீசாகும் என்று கேட்க வேண்டாம். தற்போது அனைவரும் பாதுகாப்பாக இருப்பது தான் முக்கியமான ஒன்று எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது டாக்டர் திரைப்படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து சென்சார் குழு யு ஏ சான்றிதழ் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் ரன்னிங் டைம் 148.12 நிமிடங்கள் எனவும் தெரியவந்துள்ளது.