Do you suffer from foot nails
Do you suffer from foot nails

காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும், அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால் ஆணி ஏற்படுகிறது.

1) இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டி காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

2) ஒரு கரண்டி விளக்கெண்ணெயில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து குழைத்து, ஆணி வந்த இடத்தில் பூசிவர புண் ஆறிவிடும்.

3) விளக்கெண்ணெய்யுடன் வறுத்து பொடி செய்த கடுகு, மஞ்சள் பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி இதை ஆறவைத்து வடிகட்டி இரவு நேரத்தில் தூங்க போகும் முன்பு கால்களை சுத்தப்படுத்தி இந்த தைலத்தை தடவினால், கால் ஆணி குணமாகும்.

4) மருதாணி இலை விழுதுடன் மஞ்சள் தூள் சேர்த்து இரவு தூங்குவதற்கு முன் கால் ஆணி இருக்கும் இடத்தில் வைத்துக் கட்டி காலையில் எடுத்துவிடலாம் இந்த முறையில் ஏழு நாட்கள் செய்து வர கால் ஆணி மறையும்.

5) சித்திரமூலம் (கொடிவேலி) வேர்ப்பட்டையை எடுத்து அரைத்து இரவு தூங்குவதற்கு முன் கால் ஆணி மேல் பூசி வந்தால் மூன்று நாளில் குணம் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here