Do you know what is the new dream of actor Dhanush
Do you know what is the new dream of actor Dhanush

ஒரு திரைப்படத்தில் நடிக்க, அல்லது வேறு பணிகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டு, அதற்காக கணிசமான ஒரு தொகையை அட்வான்ஸ் ஆகவும் பெற்றுவிட்டு, பிறகு ஏதோ ஒரு காரணத்தினால், அந்த திரைப்படத்தில் நடிக்காமலோ அல்லது பிற பணிகளை செய்யாமலோ போனால், சில காலம் அவர்களுக்கு அந்த படத்தில் நடித்துக்கொடுக்க அல்லது வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுக்க கால அவகாசம் கொடுக்கப்படும்.

அதற்கான விசாரணை நடைபெறும். இதில் உச்சகட்டமாக அந்த நடிகரோ அல்லது வேறொரு சினிமா சம்பந்தமான தொழில்நுட்ப கலைஞரிடம் இருந்து, எந்த விதமான பதிலும் வரவில்லை என்றால் அப்போது அவர்களுக்கு “ரெக் கார்ட்” விதிக்கப்படுகிறது. இந்த ரெட் கார்ட் விதிக்கப்பட்ட நடிகர்கள் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும்.

அல்லது தயாரிப்பாளர்கள் தங்களுடைய அடுத்த திரைப்படத்தில் அவரை புக் செய்ய தடை விதிக்கப்படும். ஏற்கனவே சிம்பு, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த சிக்கலில் சிக்கியுள்ளது அனைவரும் அறிந்ததே.

தமிழ் திரையுலகை பொறுத்தவரை தனது முதலாவது வயது முதல், நடித்து வரும் நடிகர் தான் சிம்பு. பல சர்ச்சைகளிலும் சிக்கிய நாயகனாக திகழ்ந்து வருகிறார்.

இந்த சூழலில், நடிகர் தனுஷ் இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடம், அவர்களுடைய திரைப்படத்தில் நடிப்பதற்காக பெற்ற அட்வான்ஸ் தொகையை வெகு நாட்களாக திருப்பி செலுத்தாமல், அதே சமயம் அவர்களுக்கு படம் நடித்துக் கொடுக்காமல் இருந்த நிலையில், அவருக்கு தயாரிப்பாளர்கள் கவுன்சில் ரெட் கார்ட் விதித்ததாக அண்மையில் சில தகவல்கள் வெளியாகி வந்தது.

இருப்பினும் தொடர்ச்சியாக தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பு பணியை அவர் மேற்கொண்டு வந்ததும் அறிந்ததே.

இந்நிலையில், அந்த பிரச்சனை தீவிரம் அடைந்தது, அதைத்தொடர்ந்து தற்பொழுது அதற்கு முடிவு கட்டும் வண்ணம் சில முடிவுகளை தனுஷ் எடுத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இரு நிபந்தனையோடு நடிகர் தனுஷ் மீது விதிக்கப்பட்ட ரெட் காடை தாங்கள் ரத்து செய்வதாகவும் தயாரிப்பாளர் கவுன்சில் தற்பொழுது அறிவித்திருக்கிறது. அதன்படி, பிரபல தேனாண்டால் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு திரைப்படத்தை நடித்துக் கொடுக்க தற்பொழுது தனுஷ் ஒப்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் “பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்” நிறுவனத்திடம் அவர் பெற்ற அட்வான்ஸ் தொகையை வட்டியோடு திரும்ப அவர்களுக்கு செலுத்த தனுஷ் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.

அண்மையில் தனது இயக்கத்தில் இரண்டாவது படத்தை வெளியிட்ட நடிகர் தனுஷ், தொடர்ச்சியாக “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்கின்ற தனது மூன்றாவது திரைப்படத்தை இளம் நடிகர்கள், நடிகைகளை வைத்து இயக்கி வருகின்றார்.

இன்னும் அந்த திரைப்பட பணிகளே முழுமையாக முடியாத நிலையில், விரைவில் அவர் பிரபல நடிகர் அருண் விஜயை வைத்து, ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக இப்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், அந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், பிரபல நடிகை ஒருவரை முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து மேலும் ஒரு திரைப்படத்தை தனுஷ் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. பார்க்கலாம், தனுஷ் காணும் புதிய கனவு, நடப்பில் மெய்ப்பட்டால் மகிழ்ச்சி!