Do you know how much Thalapathy Vijay got paid for acting in Vishnu Movie
Do you know how much Thalapathy Vijay got paid for acting in Vishnu Movie

விஷ்ணு படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும்,ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டிரைலருக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் கோட் படத்திற்காக விஜய் 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அவரது நடிப்பில் வெளியான விஷ்ணு படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

1995 ஆம் ஆண்டு எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் விஷ்ணு. இந்த படத்தில் விஜய் நடிக்க 3 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.