DNA Combo
DNA Combo

DNA Combo : தனுஷ் மற்றும் அனிருத்தின் DNA கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர்.

தமி சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், இவருக்கு சரியான இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் தான்.

இவர்கள் இருவரும் சேர்ந்தாலே அந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் தான். அதற்கு உதாரணமாக இவர்களது கூட்டணியில் வெளியான படங்களையே கூறலாம்.

ஆனால் ரசிகர்களின் மெகா பேவரைட்டாக இருந்து வந்த இந்த கூட்டணி சமீப காலமாக இணையாமல் இருந்து வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பேட்ட படத்தின் பாடல் ஒன்றிற்கு தனுஷ் சில வரிகளை எழுதி இருந்தார். இதன் மூலமாக அனிருத்துடன் இணைந்தார்.

இதனை தொடர்ந்து 2019-ல் தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன ரசிகர்களே DNA கூட்டணியை கொண்டாட நீங்க தயாரா?