DMK president MK Stalin
DMK president MK Stalin

DMK president MK Stalin – ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.

மேலும் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.எஸ்.சரவணனை ஆதரித்தும் பரப்புரை செய்தார்.

ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஏ.மகாராஜனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கட்சி பொது கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் பேசியவை: மத்தியில் காங்கிரசும் மாநிலத்தில் திமுக ஆட்சியும் நடைபெற போகிறது என கூறினார்.

மேலும் கலைஞர் ஆட்சியில் தான் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்பட்டன என பெருமையாக கூறினார்.

கலைஞர் ஆட்சியில், விவசாயிகளுக்கு ரூ.7ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்து கலைஞர் வாக்குறுதியை நிறைவேற்றினார்.

ஆனால், தற்போது அவ்வாறு இல்லை என கூறிய அவர், முதல் ஊழல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றும், துணை ஊழல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எனவும் கூறி இருவர் மீதும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

முன்னதாக, முதல்வர் பதவி பறிபோன பிறகுதான் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு சந்தேகம் இருப்பதாக ஓபிஎஸ் கூறினார்.

ஆனால் ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியும் ஓபிஎஸ் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடதக்கது.

அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி என்று ஊரை ஏமாற்றி கொண்டிருந்தவர்கள் தான் ஓபிஎஸ், ஈபிஎஸ் என கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஜெயலலிதா இறந்து இத்தனை நாட்களாகியும் இதுவரை அதிமுக சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.,இவ்வாறு ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேசினார்.