DMK President MK.Stalin :
DMK President MK.Stalin :

DMK President MK.Stalin : சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கோவை போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனால் திமுக தரப்பில் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை தொண்டாமுத்தூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

மன்னிக்கவே முடியாத, மன்னிக்கவே கூடாத பாவங்கள் பற்றி தெரியுமா, உங்களுக்கு?

அப்போது கூட்டத்தில் பேசிய அவர், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக பார் நாகராஜ்க்கும் அமைச்சர் ஒருவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.

மேலும் தனக்கும் பெண் குழந்தை இருப்பதாகவும், பொள்ளாச்சி சம்பவம் மிகவும் வேதனையை அளிப்பதாகவும் உருக்கமாக கூறினார்.

இந்நிலையில் ஸ்டாலின் இவ்வாறு பேசியதை அடுத்து, அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ராமச்சந்திரன் என்பவர் கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ‘ஆதாரம் இல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர் வேலுமணி தொடர்பாக இவ்வாறு அவதூறு பரப்பும் வகையில் பேசியுள்ளார்.

எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘ என்று புகாரில் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் புகாரை ஏற்றுக்கொண்ட தொண்டாமுத்தூர் போலீசார் ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஒருவரின் மாண்பை சீர்குலைப்பது, அமைதியை சீர்குலைப்பது மற்றும் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பேசுவது உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகள் அடிப்படையில் காவல் துறையின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here