DMK Party General Meeting
DMK Party General Meeting

DMK Party General Meeting – திருச்சி :காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ. 5900 கோடியில் புதிதாக அணை கட்ட கர்நாடகம் முயற்சித்து வருகிறது.

இதற்கான அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில்,”காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட அனுமதி அளித்ததை கண்டித்து திமுக இன்று பல்வேறு கட்சிகளுடன் இணைந்து கூட்டணியாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது .

இதில் கடல் அலை போன்று கூட்டம் பெருகி காணப்படுகிறது.

இந்நிலையில், அந்த அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் ஏற்றுக் கொண்டதை அடுத்து, விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

அதே சமயம், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ‘கடந்த 29-ஆம் தேதி திமுக சார்பில் அனைத்து கட்சிக் கூட்டம் கூடியது.

இந்த கூட்டத்தில் மேகதாது அணையை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததை கண்டித்து டிசம்பர் 4-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது’ என திமுகவினர் முடிவு செய்தனர்.

எனவே, இன்று திருச்சி உழவர் சந்தை திடலில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here