DMK MLA Arasu Tested Positive in COVID19
DMK MLA Arasu Tested Positive in COVID19

மேலும் ஒரு திமுக எம் எல் ஏக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DMK MLA Arasu Tested Positive in COVID19 : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் அதி தீவிரமாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட 188 நாடுகளுக்கும் மேலாக இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் இந்த வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

ஏற்கனவே திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் என்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செம கேலி கிண்டலுக்கு உள்ளாகும் விஜய் தேவர்கொண்டா போட்டோ – என்னையா கெட்டப் இது?? புகைப்படங்கள் இதோ!

இதனை அடுத்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை சேர்ந்த அதிமுக எம்எல்ஏ பழனி என்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தற்போது செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ அரசு என்பவருக்கும் கொரானா பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

இவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.