ஒரே ஒரு Cutout-டால் கடுப்பான முக்கிய பிரமுகர்கள்.!! | Latest Political News | HD

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இரண்டு தேர்தல்களில் தோல்வியை தழுவிய திமுக இந்த முறையாவது எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என திட்டமிட்டு வருகிறது.

பல்வேறு இடங்களில் தொடர்ந்து பிரச்சார கூட்டங்களை நடத்தி வருகிறது. திருச்சியில் விரைவில் திமுக மாநாடு நடைபெற உள்ளது.

ஒரே ஒரு Cutout-டால் கடுப்பான முக்கிய பிரமுகர்கள்.!!

இதற்காக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோரை முன்னிறுத்தி கட் அவுட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த முக்கிய திமுக பிரமுகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கலைஞர் கருணாநிதிக்கு அடுத்ததாக ஸ்டாலின், ஸாடாலினை தொடர்ந்து கட்சியில் உதயநிதி முன்னிறுத்தப்படுவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவினரின் இந்த செயல்பாட்டாக்கு எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன.