DMK leader Stalin condemns
DMK leader Stalin condemns

சென்னை: மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் கொண்டு வந்தது கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த அமைச்சரவை கூட்டத்தில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவது குறித்து ஆலோசனை நடத்தபட்டு, அதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவி இடங்களை மக்கள் நேரடியாக தேந்தெடுக்காமல், மறைமுகமாக தேர்ந்தெடுக்கும் விதமாக மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டமானது தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அவசர சட்டத்திற்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை நடத்தி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது. காலையில் மறைமுகத் தேர்தல் இருக்காது என்று ஓபிஎஸ் கூறிய நிலையில், மாலையில் அவசரக் சட்டம் பிறப்பித்துள்ளனர். மேலும் மேயரை மக்கள் தான் தேர்ந்தெடுப்பார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்” என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியதற்கு மாறாக மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டம் பிறப்பிக்கபப்ட்டுள்ளது என கண்டனம் தெரிவித்தார். மேலும் ‘மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றது எனவும், உள்ளாட்சியில் உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதனால் மறைமுகமாக தேர்தல் முறை மாற்றப்பட்டது’ எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.