DMK Interview
DMK Interview

DMK Interview – சென்னை: மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கான நேர்காணல் இன்று துவங்கியது.

முதல்வருக்கு எதிராக செயல்பட்டதால் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் நீதிமன்றத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அந்த 18 தொகுதிகளும் காலியானவை என அறிவிக்கப்பட்டது.

மேலும் திருவாரூர் எம்.எல்.ஏவாக இருந்த கருணாநிதி மற்றும் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவாக இருந்த போஸ் ஆகியோர் காலமானதை அடுத்து தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியானது.

மேலும் அமைச்சர் பாலகிருஷ்ணன் நீதிமன்றத்தால் 3 ஆண்டு தண்டனை பெற்றதால் அவருடைய ஓசூர் தொகுதியும் காலியாகி மொத்தம் 21 தொகுதிகள் காலியானதாக உள்ளது.

இந்நிலையில் தி.மு.க. சார்பில், மக்களவை தேர்தல் மற்றும் 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம், கடந்த 1ம் தேதி முதல், திமுக வேட்பாளர்களின் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

இந்நிலையில் நேற்று முன் தினம், இறுதி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாவட்ட செயலர்கள் வேண்டுகோளை ஏற்று நேற்று ஒரு நாள் மட்டும், கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்ட்டது.

இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிட, விருப்ப மனு அளித்தவர்களுக்கு, சென்னை, அறிவாலயத்தில் இன்று காலை நேர்காணல் நடத்தப்பட்டது.

மேலும் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு, நாளை மறுநாள் காலை 9மணி வரை நேர்காணல் நடக்கவிருக்கிறது.

இந்நிலையில் 21 தொகுதிகளில் போட்டியிட திமுக சார்பில் விருப்பமனுக்கள் பெறப்பட்டவர்களிடம் தற்போது நேர்காணல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் தொடங்கியது.

மேலும் இன்று ஒரே நாளில் 21 தொகுதிகளுக்கும் நேர்காணலை நடத்தி முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.