DMK Chief Stalin : அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட விருது பெற்ற திமுக பிரமுகர் மாஸ்டர் சேகருக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
‘தகவல் அறியும் உரிமை சட்டத்தை சிறந்த முறையில் பயன்படுத்தியவர்களுக்கு அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம் சார்பில் விருதுகள் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கி வருகிறது’.
இந்நிலையில், இவ்விருதை திமுக மாநில தொண்டர் அணி பயிற்சியாளர் மற்றும் தேக்வாண்டோ டுடே இதழ் ஆசிரியருமான மாஸ்டர் சேகர் பெற்று கொண்டார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தை சிறந்த முறையில் பயன்படுத்தியதற்காக கிடைத்த விருது மற்றும் ரொக்க பரிசை, திமுக தலைவர் ஸ்டாலினிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார்.
மேலும், திமுக தலைவர் ஸ்டாலின், இவ்விருதை பெற்ற திமுக பிரமுகர் மாஸ்டர் சேகருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினை தொடர்ந்து திமுக கட்சியின் தொண்டர்களும் மாஸ்டர் சேகருக்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.