DMDK alliance
DMDK alliance

DMDK alliance – சென்னை: வரும் லோக்சபா தேர்தலில், தேமுதிக தனது கூட்டணி யாருடன் என்னும் அறிவிப்பை இன்று மதியம் வெளியிட முடிவு செய்து இருக்கிறது. இதனால் தேமுதிக எந்த கூட்டணியில் இணைய போகிறது என்று பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. தேமுதிக தொடர்ந்து பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

முதலில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை நடத்திய தேமுதிக
அதன்பின் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது மற்றும் மூன்றாம் அணி அமைக்கும் திட்டத்திலும் தேமுதிக இருந்தது.

இருப்பினும் எவ்வித கூட்டணி பேச்சுவார்த்தையிலும் உடன்படிக்கை ஏற்படவில்லை. இதனால் தொடர்ந்து இழுபறி நீடித்தது.இதையடுத்து தேமுதிக மீண்டும் அதிமுக பக்கம் சென்றது.

இந்நிலையில் தற்போது தேமுதிக அலுவலகத்தில் அவசர கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் கூட்டணி குறித்து ஆலோசித்து வருகிறார்கள் என கூறப்படுகிறது.

தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மற்றும் பொருளாளர் பிரேமலதா ஆகியோர் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

எனவே இன்னும் சற்று நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மதியம் 12.30 மணிக்கு தேமுதிக தனது லோக்சபா தேர்தல் கூட்டணி அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று சென்னை வரும் பிரதமர் மோடி, கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் உட்பட விஜயகாந்தும் கலந்து கொள்வாரா?? என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here