DMDK, AIADMK alliance
DMDK, AIADMK alliance

DMDK, AIADMK alliance – சென்னை: அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அதிமுக சார்பில் அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, மற்ற கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் என ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் தர அதிமுக முன்வந்தது. இருப்பினும் இதை தேமுதிக ஏற்கவில்லை.

மேலும் தேமுதிக, பாமகவுக்கு இணையாக தொகுதிகள் எங்களுக்கு வேண்டும் என்றும், அதோடு இடைத்தேர்தல் நடைபெற உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 7 தொகுதிகள் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது. இதை அதிமுக ஏற்க முடியாது என்று அறிவித்தது.

இருப்பினும், தேமுதிகவை தன் பக்கம் இழுக்க தொடர் பேச்சுவார்த்தையில் அதிமுக ஈடுபட்டது.

மேலும் ‘கடந்த 6 ஆம் தேதி பிரதமர் மோடி வருகையின் போது,தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை எப்படியும் கூட்டணியில் சேர்க்கவேண்டும் என்ற நோக்கில்,

அதற்கு முன்னாள் விஜயகாந்த் வீட்டுக்கே சென்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார் ‘ என்பது குறிப்பிடத்தக்கது.,

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்ய, இன்று 9 நாட்களே உள்ளது.

எனவே இன்று மீண்டும் அதிமுக, தேமுதிக இடையே சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது.

மேலும் “பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.” வரும் தேர்தலில் தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி சேரும் என அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பு கிளம்பி இருந்தது, இன்று அதற்கான தீர்வு கிட்டியது.