Diwali Release Movies List 2019 : Sathyajothi Flims's Plan.! | Thalapathy Vijay | Bigil | Dhanush | Pattas | Kollywood Cinema News
ரஜினியை எதிர்த்து வெற்றி கண்ட சந்தோஷத்தில் தளபதி விஜயுடன் போட்டி போட சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செயத்திருப்பதாக கூறப்படுகிறது.

Diwali Release Movies List 2019 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியான விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்.

விவேகம் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்து கொடுத்தார்.

இந்த படம் மாபெரும் வெற்றி படமாகி லாப மழையை கொட்டியது. இதனையடுத்து இந்நிறுவனம் தற்போது தனுஷின் பட்டாஸ் என்ற படத்தை தயாரித்து வருகிறது.

கொடி பட இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கி வரும் இந்த படத்தை பிகிலுக்கு போட்டியாக தீபாவளி அன்று வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த பொங்கலுக்கு பேட்டையுடன் போட்டி போட்டு வெற்றி பெற்ற சந்தோஷத்தில் தற்போது விஜயுடன் மோதி பார்க்க படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.