
தீபாவளி ரேஸில் இருந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் பின் வாங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சர்கார். தீபாவளி அன்று வெளியாக உள்ள இந்த படத்துடன் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்துடன் மேலும் மூன்று படங்கள் மோத இருந்தன.
ஆனால் தற்போது தியேட்டர் பிரச்சனையால் தனுஷ் படத்தின் ரிலீஸ் தள்ளி போயுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இதனால் தீபாவளி ரேஸில் விஜயுடன் மூன்று படங்கள் மட்டுமே மோத உள்ளன. அவற்றின் லிஸ்ட் இதோ
1. திமிரு பிடிச்சவன்
2. பில்லா பாண்டி
3. களவாணி மாப்பிள்ளை