Diwali 2021 Movie Release Update
Diwali 2021 Movie Release Update

தீபாவளி ரேஸில் மூன்று படங்கள் மோதி கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Diwali 2021 Movie Release Update : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி, பொங்கல், நியூ இயர் போன்ற பண்டிகை தினங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் போட்டி போட்டுக்கொண்டு ரிலீசாவது வாடிக்கையான ஒன்று.

ஆனால் இந்த வருடம் கரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடி வைக்கப்பட்டிருப்பதால் பெரிய படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆவது என்பது கேள்விக்குறியான ஒன்றாகியுள்ளது.

மாஸ்டர் மற்றும் வலிமை படம் ரிலீஸ் எப்போது தெரியுமா?

இருப்பினும் இந்த தினத்தில் படங்களை OTT நிறுவனங்களின் வழியாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அந்த வகையில் இந்த வருட தீபாவளி ரேஸில் ராகவா லாரன்ஸ் இயக்க அக்ஷய் குமார் நடித்துள்ள லக்ஷ்மி பாம் என்ற காஞ்சனா படத்தின் ரீமேக் திரைப்படம், விஷால் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா திரைப்படம் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் ஆகியவை மோதிக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த மூன்று திரைப்படங்களும் பிரபல OTT நிறுவனங்கள் வழியாக வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.