மகாநதி சீரியலில் இருந்து திவ்யா கணேஷ் விலகியுள்ளார்.
தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மகாநதி. இந்த சீரியலில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ்.
ஏற்கனவே கங்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை விலகியதால் அவருக்கு பதிலாக திவ்யா கணேஷ் நடித்து வருகிறார். மகாநதி சீரியலில் கங்கா குமரன் ஜோடி மிகவும் பிரபலமாகி வருகிறது.
இந்த நிலையில் நடிகை திவ்யா கணேஷ் சீரியல் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதால் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சீரியலில் இருந்து விலகப் போவதாக வெளியே தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் திவ்யா கணேஷ் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு இடையே பெரும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.