ரெட் லைட் வெளிச்சத்தில் திவ்யபாரதி எடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தை சூடேற்றி வருகிறது.

மாடலிங் துறையில் 5 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வந்த திவ்யபாரதி ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

ஆனால் முதல் படத்திலேயே அனைவருக்கும் பரிச்சயமான இவர் அப்படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும் திவ்யபாரதி தற்போது வெளியிட்டு இருக்கும் வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படம் இணையத்தில் சூடேற்றி வருகிறது.

அதாவது சிவப்பு நிற வெளிச்சத்தில் கிளாமரான உடையில் அமர்ந்து கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்து எடுத்திருக்கும் புகைப்படம் ரசிகர்களை திக்கு முக்காட செய்து இருக்கிறது. தற்போது இந்த ஹாட் புகைப்படங்கள் இணையத்திலும் தீயாக பரவி வருகிறது.