பிகில் தயாரிப்பாளருக்கு பெரிய தலைவலியாக விநோயோகிஸ்தர்கள் நெருக்கடி கொடுத்து வருவதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.
பிகில் சிறப்பு காட்சிகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அதெல்லாம் அனுமதி இல்லை என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து விட்டார்.
இதனால் விநியோகிஸ்தர்கள் பிகில் தயாரிப்பாளருக்கு சிறப்பு காட்சி இல்லை என்றால் லாபம் எடுக்க முடியாது. நாங்கள் கொடுத்த பணத்தில் இருந்து பாதியை திருப்பி கொடுத்து விடுங்கள் என கூறி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.