கர்ணன் படம் பெரும் லாபத்தை கொடுத்த நிலையில் விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளரை பாராட்டியுள்ளனர்.

Distributors Celebrate Karnan Success : தமிழ்் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன். இந்த படத்தினை மாரி செல்வராஜ் இயக்க கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபலங்களும் இந்த படத்தினை பாராட்டி வருகின்றனர். தனுஷ் படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையும் கர்ணன் திரைப்படம் பெற்றுள்ளது.

அதிலும் குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய பகுதிகளில் படம் வசூல் வேட்டையாடிள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவை சந்தித்து மாலை அணிவித்து பாராட்டி உள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.