Distributor Decison Against Ajith Vijay Movies - Shocking Update | Kollywood Cinema News | Tamil Cinema News | Thala Ajith | Thalapathy Vijay
தல அஜித், ரஜினி, விஜய் மற்றும் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு செக் வைத்துள்ளனர் விநியோகிஸ்தர்கள். இதனால் NKP வசூல் என்னவாகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே அதிகமான தியேட்டர்களில் வெளியாவது வழக்கமான ஒன்று.

இதனால் இப்படங்களுடன் ரீலீஸாகும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது கொஞ்சம் கஷ்டமான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது சேலம் பகுதியை சேர்ந்த விநியோகிஸ்தர்கள் ஒன்று சேர்ந்து தயாரிப்பாளர் சங்கத்துடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

சூர்யா பேசுனது யாருக்கு கேட்டுச்சோ இல்லையோ மோடிக்கு கேட்டுடுச்சு – கேட்டா மட்டும் போதுமா தலைவரே.!

அதன் படி இனி சேலம் பகுதியில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிம்பு, ஜெயம்ரவி, ராகவா லாரன்ஸ், விக்ரம் போன்ற நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்களை 45 டிஜிட்டல் பிரிண்டுகள் மட்டுமே ரிலீஸ் செய்வோம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் வரும் ஆகஸ்ட் 8-ல் ரிலீஸாக உள்ள நேர்கொண்ட பார்வை வசூல் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு முன்பு வரை சேலம் பகுதியில் பெரிய பட்ஜெட் படங்கள் 65 டிஜிட்டல் பிரிண்ட்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.