Dhanush
தனுஷ் மீது கேஸ் போடுவேன் என மூத்த இயக்குனர் ஒருவர் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Director Visu Talk About Netrikan Remake : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படுவதாக கூறி இருந்தார்.

இதனையடுத்து அந்த படமும் உருவாக உள்ளது. ரஜினி வேடத்தில் தனுஷும் மேனகா வேடத்தில் கீர்ட்டி சுரேஷும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நெற்றிக்கண் படத்தின் கதையாசிரியரும் மூத்த இயக்குனருமான விசு தனுஷ் என்னுடைய அனுமதி இல்லாமல் நெற்றிக்கண் படத்தை எடுத்தால் அவர் மீது வழக்கு தொடர்வேன் என பேசியுள்ளார்.