இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹேக்கருக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வளர்ந்து வருபவர் விக்னேஷ் சிவன். நடிகை நயன்தாராவின் கணவருமான இவர் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து தல அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை இயக்க இருந்தார். ஆனால் சில பல காரணங்களால் அதிலிருந்து வெளியேறிய விக்னேஷ் சிவன் தற்போது லவ் டுடே திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் மர்ம நபர்களால் விக்னேஷ் சிவனின் சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு அந்த கணக்கை மீட்டெடுத்த விக்னேஷ் சிவன் இது தொடர்பாக வெளியிட்டு இருக்கும் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதில் அவர், “என் சமூக வலைதள கணக்கு மீட்டெடுக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நான் மிகவும் அமைதியாக இருந்தேன். என் கணக்கை ஹேக் செய்தவர்களுக்கு மிக்க நன்றி. அப்ப அப்ப பண்ணுங்க ” என்று தனது குழந்தையுடன் இருக்கும் க்யூட்டான புகைப்படத்துடன் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.