புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார் வெங்கட் பிரபு.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, மோகன், யோகி பாபு, லைலா, ஜெயராம், பிரேம்ஜி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில் வசூலிலும் மிரட்டி வருகிறது.
அந்த வகையில் தற்போது இந்த படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு, புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளாராம்.”Range Rover”என்ற இந்த காரின் விலை சுமார் 86 லட்சம் என்று சொல்லப்படுகிறது.
இந்தத் தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.