தளபதி 66 திரைப்படத்தை பிரம்மாண்ட படமாக இயக்க இருப்பதாக இளம் இயக்குனர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Director Vamsi Confrim Thalapathy66 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்.

பிரமாண்ட படமாக உருவாகும் தளபதி 66... இயக்கப் போவது யார் தெரியுமா? - அதிகாரப்பூர்வமாக அறிவித்த இயக்குனர்

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருப்பதாகவும் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை யாரும் உறுதி செய்யவில்லை.

இந்த நிலையில் வம்சி தெலுங்கு பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது உறுதி என கூறியுள்ளார். இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் என்னுடைய சினிமா பயணத்திலேயே இது முக்கியமான படமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ‌