Vamsi About Thalapathy 66

தளபதி விஜய் பற்றியும் தளபதி 66 படம் பற்றியும் இயக்குனர் வம்சி அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Director Vamsi About Thalapathy 66 Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற மாஸ்டர் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தினை தில் ராஜு தயாரிக்கிறார்.

தீபாவளி சிறப்பு ரயில்கள் : டிக்கெட் கட்டணம் உயர்வு

தற்போது இந்த படம் பற்றி இயக்குனர் வம்சி அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போது என்னுடைய படத்தில் மனித உறவுகளும் உணர்வுகளும் இருக்கும். அதுதான் என்னுடைய பலம். தளபதி 66 படத்தில் இது நிச்சயம் இருக்கும்.

Suirya கிட்ட கேட்க கூச்சமா இருந்தது – Interview With Jai Bhim Director TJ Gnanavel | HD

தளபதி விஜய் ரசிகர்களையும் அவரது நட்சத்திர அந்தஸ்தையும் வைத்து இந்த படத்தின் கதையை எழுதியுள்ளேன். படத்தில் அப்டேட்டுகள் டிசம்பர் மாதம் முதல் வெளிவரும் என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் விஜய் திரையுலகில் உச்சத்திற்கு சென்றால் அதை மற்றவர்களிடம் கனிவாக நடந்து கொள்வது இன்னும் மாறவில்லை. அவரைப் பொறுத்தவரை இயக்குனரிடம் எந்தவித சங்கடமும் இல்லாமல் இருப்பதே படத்தை தொடங்குவதற்கான சிறந்த அளவுகோல் என்று இருந்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.