Director Thiru Emotional Tweet

காதல் கோட்டை சூர்யாக்கள் இன்னமும் இருக்கிறார்கள் என இயக்குனர் திரு பதிவிட்டுள்ளார்.

Director Thiru Emotional Tweet : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் திரு‌. குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனியின் கணவர் இவர் தான்.

இவர் சமீபத்தில் இவருடைய பர்ஸ் ஒன்றை தவற விட்டுள்ளார். கிடைக்கவே கிடைக்காது என நினைத்த பர்ஸ் இரண்டு வாரங்கள் கழித்து ஒருவரின் உதவியால் கிடைத்துள்ளது.

இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தேடி அலஞ்சு இனிமே கிடைக்க வாய்ப்பே இல்லனு சோர்ந்து உக்காரும் போது உங்களுக்கு ஏதாவது கிடைச்சிருக்கா.. எனக்கு கெடச்சுது.. Yes என்னோட Waller, After 2 weeks.. காதல் கோட்டை சூர்யாக்கள் நிஜத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள் .. Thank you Mr G.Mohan #Humanity #மனிதம்” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மனிதநேயத்துடன் பர்சை கொண்டு சேர்த்த மனிதருக்கு இயக்குனர் திரு வெளிப்படையாக நன்றி தெரிவித்திருப்பது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.