இயக்குனர் சுதா கொங்காரா வாங்கிய முதல் கார் குறித்த பதிவு வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி பெண் இயக்குனராக வலம் வருபவர் சுதா கொங்காரா. இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் இப்படத்தை தொடர்ந்து சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கியிருந்தார். சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஐந்து தேசிய விருதையும் வென்றிருந்தது.

இயக்குனர் சுதா கொங்காரா வாங்கிய முதல் கார்!!… ஜாலி ரைடில் கலந்து கொண்ட நடிகர் சூர்யாவின் புகைப்படம் வைரல்.!

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகியிருந்த இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து அபர்ணா பாலமுரளி,ஊர்வசி, மோகன் பாபு மற்றும் கருணாஸ் ஆகியோர் துணை கதாப்பத்திரங்களில் நடித்திருந்தனர்.

இயக்குனர் சுதா கொங்காரா வாங்கிய முதல் கார்!!… ஜாலி ரைடில் கலந்து கொண்ட நடிகர் சூர்யாவின் புகைப்படம் வைரல்.!

இப்படத்தை தொடர்ந்து பிசியான இயக்குனராக வலம் வரும் சுதா கொங்காரா புதிதாக ஒரு ஆடி எலக்ட்ரிசிட்டி கார் ஒன்றை வாங்கியுள்ளார். ரூ 1.5 கோடி மதிப்பில் உள்ள இந்த சொகுசு காரில் இயக்குனர் மணிரத்தினம், சூர்யா, ஜிவி பிரகாஷ் மற்றும் தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் ஆகியோருடன் இணைந்து ஜாலியாக ரைடு சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்ட சுதா கொங்காரா அதில், தன்னுடைய ஃபேவரிட் மனிதர்களுடன் தன்னுடைய முதல் கார் என்று பதிவிட்டு அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.