Viswasam Secrets

Viswasam Secrets : தல அஜித்திற்கு டபுள் ஆக்டிங் இல்லை எனவும் படத்தின் கதை எப்படி இருக்கும் என்பது பற்றியும் இயக்குனர் சிவா அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படம் பற்றி இயக்குனர் சிவா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சுவாரஷ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதாவது படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை, ஒரே அஜித் தான். படத்தில் பாதி வரை கிராமத்திலும் மீது சிட்டியில் என படம் உருவாகியுள்ளதாம்.

இந்த படத்தில் நயன்தாராவுக்கும் வெயிட்டான வேடம், நிரஞ்சனா என்ற பெயரில் நடித்துள்ளாராம். அஜித் வெளியில் வீரமாவும் உள்ளுக்குள் வெள்ளந்தியான மனிதர்களுடனும் இருக்கும் நபராக நடித்துள்ளாராம்.

கிராமத்து ஆளாகவும் மதுரை பாஷையிலும் மாஸான பேசி அசத்தியுள்ளார் அஜித் சார் என கூறியுள்ளார். இதனால் விஸ்வாசம் ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டமாக அமையும் என்பது உறுதியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.