சிறுத்தை சிவாவின் அடுத்த பட ஹீரோ யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Director Siva in Next Hero : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சிறுத்தை சிவா. சிரித்து என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் அடுத்ததாக தல அஜித்தை வைத்து வீரம் வேதாளம் விவேகம் விசுவாசம் என தொடர்ந்து 4 படங்களை இயக்கினார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கியுள்ளார்.

ரஜினியும் இல்ல அஜித்தும் இல்ல.. சிறுத்தை சிவா அடுத்ததாக யாரை இயக்கப் போகிறார் தெரியுமா??

அண்ணாத்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா மீண்டும் அஜித் அல்லது ரஜினியுடன் இணைந்து படத்தினை இயக்குவார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி சிறுத்தை சிவா அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.

அண்ணாத்த திரைப்படத்திற்கு முன்னதாகவே சிறுத்தை சிவா ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருந்தார். ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் சூர்யா அந்த படத்தை முடித்துவிட்டு வாங்க என பெருந்தன்மையோடு அனுப்பி வைத்தார்.

இதனால் அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகும் படத்தை இயக்கப் போகிறார் என தகவல் கிடைத்துள்ளது. சூர்யாவும் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாகவுள்ள பக்கா கிராமத்து கதையில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.