சினிமாவுக்கு துரோகம் செய்த நீங்க தயாரிப்பாளர்களை பற்றி தவறாக பேச கூடாது என வடிவேலுவை சாட்டியது மட்டுமில்லாமல் எச்சரிக்கையும் விடுத்துள்ளார் தயாரிப்பாளர் ஒருவர்.
Director Shankar Vs Vadivelu : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி கொண்டவர் வடிவேலு, நகைச்சுவையின் மன்னனான இவர் 24-ம் புலிகேசி பட பிரச்சனையால் எந்தவொரு படத்திலும் நடிக்க முடியாமல் இருந்து வருகிறார்.
சமீபத்தில் நேசமணி ஹேஸ்டேக் உலக அளவில் ட்ரெண்டானதை தொடர்ந்து வடிவேலு பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் இயக்குனர் சிம்பு தேவனை விளாசி இருந்தார்.
மேலும் தயாரிப்பாளர் சங்கரையும் மற்ற தயாரிப்பாளர்களும் ஒருமையில் பேசி இருந்தார். இது குறித்து தற்போது பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான டி.சிவா எச்சரித்து பேசியுள்ளார்.
சினிமாவுக்கு துரோகம் செய்த நீங்க தயாரிப்பாளர்களை பற்றி பேசவே கூடாது, இனியும் இது போல் பேசினால் உங்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.